ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1' ஐ.சி.சி., தரவரிசையில் …..
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அடுத்த இரு இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட் (731), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (713) உள்ளனர். இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், (612), 16 வது இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அரைசதம் அடித்த தீப்தி சர்மா (610) ஒரு இடம் (17) முந்தினார்.கடந்த இரு போட்டியில் சிறப்பாக செயல் பட்ட ஹர்லீன் (48, 46 ரன்) 7 இடம் முன்னேறி 38 வது இடம் பிடித்தார்
0
Leave a Reply